search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்பு நடவடிக்கை"

    • டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    • கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் காய்ச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதே வேளையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பொது மக்களிடயே அச்சத்தையும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. தற்போது மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் காய்ச்சல் காரணமாக 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாக திட்டமிட்டுள்ளது.

    அதன்படி பொன்னமராவதி பாப்பாயி ஆட்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு, கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, கீரனூர், விராலிமலை மற்றும் கந்தர்வகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கும் முகாம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

    வீடுகள் தோறும் சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    புதுக்கோட்டையில் அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது, திறந்த வெளியில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள், டயர்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும். டெங்கு தடுப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    • தொடர் மழை, சுகாதார சீர்கேடு போன்ற காரணங்களால் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
    • தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெங்குவால் பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மதுரை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கொசுத் தொல்லையும் அதிகரித்து உள்ளது. மழைக்காலம் என்பதால் தற்போது மதுரையில் பொதுமக்கள் பலருக்கும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் அதிகரித்து வருகின்றனர்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் காய்ச்சல், உடல் வலி, சளி, தொடர் இருமல் போன்ற பாதிப்புகளால் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் தீவிர பாதிப்பு உள்ளவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இதில் கடந்த வாரம் மட்டும் 17 பேருக்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள தனிவார்டில் 24 மணி நேரமும் டாக்டர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையில் நேற்று 15 பேருக்கும், இன்று 8 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோன்று தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெங்குவால் பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மதுரை நகரில் நாளுக்குநாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர் மழை, சுகாதார சீர்கேடு போன்ற காரணங்களால் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறையும் மாநகராட்சியும் இணைந்து மதுரையில் டெங்கு பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கிய இடங்களில் மருத்துவ முகாம், டெங்கு விழிப்புணர்வு போன்றவற்றை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் சுகாதாரத்துறை மூலம் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் வார்டு வாரியாக கொசுமருந்து அடிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    ஆனாலும் சுகாதார சீர்கேடுகளை சரி செய்து நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் தீவிர தடுப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர் பார்க்கிறார்கள்.

    • தேவகோட்டையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • நகர்மன்ற தலைவர் கொசு மருந்து அடித்தார்

    தேவகோட்டை

    தமிழக அரசு தற்போது டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல் சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டை நகராட்சியில் டெங்கு தடுப்பு நடவ டிக்கையை நகர்மன்ற தலைவர் மற்றும் ஆணையா ளர் தீவிரமாக எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் ராம்நகர் 11 -வது வார்டு சஞ்சீவிபுரம், செந்தில்நகர் பகுதிகளில் டெங்கு பாதிப்புக்கான அறிகுறிகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களின் வீடுகளில் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் கொசு மருந்து அடித்தார். ஆணையாளர் பார்கவி உடனிருந்தார்.

    அந்த வீடுகளில் உள்ள நபர்களை மாவட்ட தொற்று நோய் தடுப்பு வல்லுநர் டாக்டர் கிருஷ்ண வேணி, நகராட்சி சுகாதா ரத்துறை அலுவலர் ரவிச்சந்திரன் பரிசோதனை செய்தனர். நகராட்சி பணி யாளர்கள் வீடு முழுவதும் கிருமி நாசினிகள் தெளித்து வீட்டின் உரிமையாளருக்கு டெங்கு பரவாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத் தினர். மேலும் நகரில் டெங்கு அறிகுறி ஏற்பட்ட நபர்கள் இருக்கும் பகுதி களில் காலை, மாலை இரு வேளைகளில் கிருமி நாசி னிகள் தெளிக்கப்பட்டு கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. நகராட்சி பணி யாளர்கள் நகர் முழுவதும் தீவிரமாக டெங்கு தடுப்பு நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய தலைவர்உறுதி கூறினார்.
    • துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டைச்சாமி நன்றியுரை வழங்கினார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை ஒன்றிய குழு சாதாரண கூட்டம் தலைவர் பிர்லாகணேசன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ராஜாத்தி நடராஜன். ஆணையாளர் பாலகிருஷ் ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் புவனேசுவரன் அனைவரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் ஒன்றிய தலைவர் பேசுகையில், பொது நிதியிலிருந்து ரூ.4.87 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் 37 ஊராட்சிகளில் நடைபெற்று வருகிறது. அனைத்து ஊராட்சிகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டுமெனஅதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

    பல்வேறு தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டைச்சாமி நன்றியுரை வழங்கினார்.

    • அரசு மற்றும் தனியார் மருத்து வமனைகளுக்கு சென்று காய்ச்சல் கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • கொசுப்புழுக்கள் தேங்கா வண்ணம் தடுப்பு நடவடிக்கை எடுக்க 40 பணியாளர்களை நியமித்து கொசுப்புழு தடுப்பு மருந்து ஊற்றும் பணி நடந்து வருகிறது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள ெசய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமாரபாளையம் நகராட்சியில் 22 ஆயிரத்து 25 குடியிருப்புகள், 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது வட கிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் நீரினால் பரவக்கூடிய வாந்தி, பேதி, காலரா, டைப்பாய்டு, மஞ்சள் காமாலை, போன்ற தொற்று நோய்களும், கொசுக்கள் மூலம் பரவக்கூடிய மலேரியா, டெங்கு, யானைக்கால் நோய், மூளைக்காய்ச்சல், சிக்குன் குனியா போன்றவற்றை தடுக்க குமாரபாளையம் நகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதன்படி நகராட்சியின் உள்ள 33 வார்டுகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் நீர் சேமித்து வைக்கப்படும் கலன்கள் ஆய்வு செய்து கொசுப்புழுக்கள் தேங்கா வண்ணம் தடுப்பு நடவடிக்கை எடுக்க 40 பணியாளர்களை நியமித்து கொசுப்புழு தடுப்பு மருந்து ஊற்றும் பணி நடந்து வருகிறது.

    தினசரி காலை, மாலை வேளையில் வார்டுகளில் முதிர் கொசுக்களை அழிக்க புகை தெளிப்பான் கருவிகள் கொண்டு புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. துப்புரவு ஆய்வாளர்கள் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்து வமனைகளுக்கு சென்று காய்ச்சல் கண்டறியப்பட்டு தடுப்பு நட வடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தண்ணீரை காய்ச்சி பருக வேண்டும். வீடுகளில் உள்ள பயனற்ற கழிவுப்பொருட்களை நகராட்சி பணியா ளர்களிடம் அவசியம் கொடுக்க வேண்டும். சேமித்து வைக்கும் தண்ணீரை மூடி வைக்க வேண்டும் என அறி வுரை வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் வீட்டில் கொசுப் புழுக்கள் கண்டறியப்பட்டால் 500 ரூபாய் அபராதமும், வணிக நிறுவனங்களில் கண்டறியப் பட்டால் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு இதர பொது சுகாதார சட்ட பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    ×